2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

’அபிவிருத்தியை நூரளைக்கு மட்டும் மட்டுப்படுத்தாதீர்’

Editorial   / 2019 நவம்பர் 25 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள கண்டி மனித உரிமை தாபனம், புதிய ஜனாதிபதியின் அரசாங்கத்தில், பங்காளிக் கட்சியாக இருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், அபிவிருத்திப் பணிகளை, நுவரெலியா மாவட்டத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, மலையக மக்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என்றும் கோரக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மனித அபிவிருத்தித் தாபனம், நேற்று முன்தினம் (22) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமன்றி, மலையக மக்கள் பரந்து வாழும் கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, பதுளை, காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களிலும் பெருந்தோட்ட மக்கள் அதிகளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்துள்ளனர் என்றும் எனவே, புதிய ஜனாதிபதியின் வெற்றிக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே பெருந்தோட்ட மக்களுக்கு, புதிய அரசாங்கத்தால் வழங்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை, நுவரெலியா, பதுளை மாவட்டத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, வெளிமாவட்டங்களும் விஸ்தரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொணடுள்ளது.

அத்துடன், பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு, அபிவிருத்தியிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸன் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .