2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

’அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் கூட்டணி அமைச்சர்கள்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் மீது அதிருப்தியில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்கள் உள்ளனர் என்று,  ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்கும் விவகாரத்தில், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எண்ணி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்கள் மனமுடைந்துள்ளனர் என அறிய முடிவதாகவும் 50 ரூபாய் விவகாரத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுமே இடையூறாக உள்ளனர் என்றும் அவர்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல், அரசாங்கத்தின் மீதான அதிருப்தியில் கூட்டணியின் அமைச்சர்கள் இருப்பதைத் தான் உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இனிமேலும் 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .