2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

அறுவரை கடித்துக்குதறிய நாய் சுட்டுக்கொலை

Kogilavani   / 2017 மே 24 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


 அறுவரை கடித்துக்குதறிய நாயொன்றை, பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் பலாங்கொடையில், செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பலாங்கொடை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை நகரில் நாயொன்று ஆறுவரை கடித்துக் குதறியதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து, பலாங்கொடை நகருக்கு விரைந்த பொலிஸார், குறித்த நாயை இனங்கண்டு சுட்டுக்கொன்றுள்ளனர்.

இதேவேளை, நாய்க் கடிக்குள்ளான நபரொருவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததாகவும் அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட அறுவரில் நால்வர், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் ஒருவர் பலாங்கொடை வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பலாங்கொடை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, பரி​சோதனைக்காக நாயின் தலை, கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .