2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

ஆசிரியையின் மரணத்தில் சந்தேகம்: பொலிஸார் தீவிர விசாரணை

Kogilavani   / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக், பாலித ஆரியவன்ச

மஹியங்களை லொக்கல்லா ஒயாவிலிருந்து, சடலமாக மீட்கப்பட்ட டீ.எம்.ஹீன்மெனிகா (வயது 55) என்ற பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் இது தொடர்பில் தீவிர விசாரணைகைளை மேற்கொண்டு வருவதாகவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, லொக்கல்லா ஒயாவிலிருந்து மேற்படி பெண்ணின் சடலம், சனிக்கிழமை (10) மீட்கப்பட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டது.

மரண விசாரணைகளை தொடர்ந்து, இவரது உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக, அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், ஹேபொல வித்தியாலத்தில் ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

இவர், பிபிலை சந்தைக்கு செல்வதாக கூறி சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து சென்ற நிலையிலையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .