Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதிஸ்
ஹட்டனில் ஆபாசப்பட இறுவட்டுகளுடன் ஒருவரை, ஹட்டன் குற்றத்தடுப்புப் பொலிஸார், இன்று (22) மாலை கைதுசெய்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வெலிமடைக்குப் பயணித்த காரை, ஹட்டன் - மல்லியப்பூ சந்தியில் வைத்து வழிமறித்து சோதனை செய்த பொலிஸார், அதில் 1, 550 ஆபாசப்பட இறுவட்டுகளை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்ததாகவும் தெரிவித்தனர்.
வெலிமடையிலுள்ள இறுவட்டுகள் விற்பனை செய்யும் நிலையத்துக்கு விநியோகிப்பதற்காக, மேற்படி இறுவட்டுகள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளன என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கேகாலை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .