2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஆர்ப்பாட்டப் பேரணி

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், ஆ.ரமேஷ்

கந்தப்பளை தேயிலை மலைத் தோட்டத்தில், 16 வயதுச் சிறுமியொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் பிரதேசத்தில் இயங்கிவரும் சாராயத் தவறணைகளை மூடுமாறு கோரியும், இன்றைய தினம் (21) ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக ஆய்வாளர் அமைப்புடன் இணைந்த மீனாட்சி பெண்கள் பாதுகாப்பு அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், தேயிலை மலைத் தோட்ட வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கந்தப்பளை நகரத்துக்கு, பேரணியாகச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .