Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஜூலை 17 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
'தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவுத் தொகையான 2,500 ரூபாய், இன்னும் இரண்டு வாரங்களில் செலுத்தப்படும் என்பதில் ஐயமில்லை' என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மஸ்கெலியா - பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில், சனிக்கிழமை (16) இடம்பெற்ற பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட, 61 சதவீதத்துக்கு மேல் அங்கத்துவ பலம் வேண்டும். ஆனால், தற்போதுள்ள உடன்படிக்கையில் கைச்சாதிடும் இரண்டு பிரதான கட்சிகளுக்கு, 45 சதவீதம் தான் அங்கத்துவம் இருப்பதாக தெரியவந்துள்ளது' என்றார்.
'இந்த நிலையில் 1,000 ரூபாயை சம்பள உயர்வாகப் பெற்றுத் தருவதாகப் பொய் கூறிக்கொண்டும் தேயிலை விலையின் மீது பழியைப் போட்டுக்கொண்டுமுள்ள சிலர், தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
ஆனால், தொழிலாளர்களின் நிலை உணர்ந்து, 2,500 ரூபாயை இடைக்காலக் கொடுப்பனவாக வழங்க வரம் பெற்றுக்ளோம்.
இத்தொகையானது, இரண்டு வாரங்களில், தொழிலாளர்களின் கரம் வந்து சேரும். இத்தொகையை அரசாங்கமே தருகின்றது. கம்பனிகாரர்கள் அல்ல. தொழிலாளர்கள் திருப்பிச் செலுத்தும் பணமும் அல்ல. கடனாகவும் வழங்கவில்லை. ஆனால் இத்தொகை, நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதமே வழங்கப்படுகின்றது.
இச்சலுகையைக் கூட அனுபவிக்க விடாமல், சில தொழிற்சங்க அங்கத்தவர்கள், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்கின்றார்கள். இத்தொகை, கட்சி பேதமின்றி, அனைவருக்கும் கிடைக்கும் சலுகை என்பதை மறந்து விடக்கூடாது' என்று அமைச்சர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago