Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
2019ஆம் ஆண்டு, இரத்தினபுரி பிரதேசத்துக்கு இயற்கை அனர்த்தம் ஏற்படாத ஆண்டாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனீ லொகுபோதாகம மகிழ்ச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், வருடா, வருடம்
இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளம், மண்சரிவு பாதிப்புகள், 2019ஆம் ஆண்டு ஏற்படவில்லை என்றும் இறைவன் வழங்கிய மிகப்பெரிய அருட்கொடையாக, தாம் இதனைக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று, எதிர்வரும் காலங்களிலும் எமது பிரதேசத்தில், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடாது என இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச தொழில் என்பது, மிகப் பெரிய வரப்பிரசாதமாகும் என்றும் பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடிய பாரிய பொறுப்புகளை, அரச தொழிலுள்ளவர்கள் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
19 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago