2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இரசாயனப் பொருட்களுடன் கைதான இருவர் விளக்கமறியலில்

Kogilavani   / 2016 மே 22 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மொஹொமட் ஆஸிக்

கண்டி, அலவத்துகொடையில் இரசாயான பொருட்களுடன் கைதான முன்னாள் இராணவ வீரர்கள் இருவரை, எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேலதிக நீதவான் இந்திக்க அத்தநாயக்க சனிக்கிழமை(21) உத்தரவிட்டார்.

அவிஸ்ஸாவலை, கன்தலையை சேர்ந்த 35,40 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி, அலவத்துகொடை நகரில் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய  மேற்படி இருவரையும் பொலிஸார் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து நொடியில் தீப்பற்றக்கூடிய இரசாயன திரவம், இரசாயன பொருட்கள், திசைக்காட்டி என்பவற்றை மீட்டுள்ளனர்.

இவர்கள் புதையல் தோண்டுவதற்காக மேற்படி உபகரணங்களுடன் அலவத்துகொடை நகருக்கு வந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

விசாரணைகளின் பின் இருவரையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .