Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2017 மே 29 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ, உமாமகேஸ்வரி
சீரற்ற காலநிலை காரணமாக, இரத்தினபுரி மாவட்டமே அதிகளவு இழப்புகளைச் சந்தித்திருப்பதாக, அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்தது.
“இரத்தினபுரி மாவட்டத்தில், வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 16,389 குடும்பங்களைச் சேர்ந்த 69,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 71 பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை, 5 பேர் காயமடைந்துள்ளதுடன் 20 பேர் காணாமற்போயுள்ளனர்” என்று, அனர்த்த முகாமைத்துவ மத்தியம் நிலையம் தெரிவித்தது.
இம்மாவட்டத்தில், 42 வீடுகள் முழுமையாக சேதமாகியுள்ளதுடன், 269 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட 7,642 குடும்பங்களைச் சேர்ந்த 33,248 பேர், 134 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை, பிரதேச செயலகங்களும் நலன்புரி நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
இரத்தினபுரி நகர் உட்பட்ட பல பிரதேசங்களில், 18 அடிக்கு வெள்ள நீர் உயர்ந்துக் காணப்பட்டதாகவும் தாழ்நிலங்கள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை பிரதேச செயலகப் பிரிவு, பெல்மடுளை பிரதேச செயலகப் பிரிவு, நிவித்திகலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில், பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இம்மண்சரிவுகளில் சிக்கி பலர் மண்ணுள் புதையுண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மண்ணுள் புதையுண்டவர்களை மீட்கும் பணிகளில், இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக, பிரதேச செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் 1,465 குடும்பங்களைச் சேர்ந்த 5,366 பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இம்மாவட்டத்தில், இருவர் பலியாகியுள்ளதுடன் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். இருவர் காணாமல் போயுள்ளனர்.
9 வீடுகள் முழுமையாகவும் 53 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 353 குடும்பங்களைச் சேர்ந்த 1,424 பேர், 9 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, அந்நிலையத்தின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
6 hours ago