Sudharshini / 2016 மார்ச் 16 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஹல்துமுல்லை, ஊவாதென்ன பகுதியில் செவ்வாய்க்கிழமை (15) மாலை இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர் மீது, மண்மேடு சரிந்து விழுந்ததில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், ஊவாதென்ன பகுதியைச் சேர்ந்த எஸ்.எச்.ஜேமிஸ் என்ற 59 வயதான 5 பிள்ளைகளின் தந்தை ஆவார்.
மேற்படி நபர், இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மண்மேடு அவர் மீது சரிந்து வீழந்துள்ளது. இதனையடுத்து, மண்ணுக்கு சிக்கியிருந்தவரை மீட்டு ஹல்துமுல்லை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், அந்நபர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போதே மேற்படி அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதென ஹல்துமுல்லை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .