Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 30 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துமாறுகோரி, இரத்தினபுரி மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து 10 இலட்சம் கையெழுத்து வேட்டை நாளை(31) இரத்தினபுரி மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் ஆரம்பிக்க உள்ளோம் என்று இரத்தினபுரி மாவட்டத்தின் ஒன்றினைந்த எதிர்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இரத்தினபுரி மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் ஊடக கலந்துரையாடல் ஒன்று நேற்று(29) இரத்தினபுரி சமூதி மண்டபத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இரத்தினபுரி மாவட்டத்தின் ஒன்றினைந்த எதிர்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு நாளையுடன்(31) ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், இன்னும் அதற்கான தேர்தல் நடத்தப்பட வில்லை. இன்று பொது மக்களின் சுதந்திரம் பரிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் நடுத்தெருவில் இறங்குவதற்கும் ஆயத்தமாக உள்ளார்கள்.
நல்லாட்சி அரசாங்கம் மக்களை ஏமாற்றி பொய்தான் செய்து வருகின்றது. இதை மக்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள். இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது.
இன்று தேயிலை, இறப்பர் என்பவற்றுக்கு தகுந்த விற்பனை விலை இல்லை, உரம் விலை அதிகரித்துள்ளது, மாவின் விலை அதிகரித்துள்ளது. பொது மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு அரசாங்கம் நல்லாட்சி பற்றி பேசுகின்றது.
கிராமிய பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகள் முடங்கி விட்டது. மக்களுக்கு கூடுதலான சேவை செய்பவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள்தான். நல்லாட்சி அரசாங்கம் நாலாந்தம் மின்சாரத்தை தூண்டித்துவிட்டு பொது மக்களை இருட்டில் வாட்டும் சேவையைத்தான் செய்கின்றது.
எனவே, விரைவில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி இரத்தினபுரி மாவட்டத்தில் 10 இலட்சம் கையொப்பமிடும் வேட்டை நாளை(31) ஆரம்பித்து அதை தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்க உள்ளோம்.
மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை அமைக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
6 hours ago