2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

இரு களஞ்சியசாலைகள் தீக்கிரை

பா.திருஞானம்   / 2017 ஜூலை 21 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை, பூண்டுலோயா நகரத்திலுள்ள இரு களஞ்சியசாலைகளில், நேற்று மாலை  ஏற்பட்ட  தீயால், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

பூண்டுலோயா அரச பஸ் டிப்போ ஊழியர்கள்¸ பொதுமக்கள் ஆகியோர் பூண்டுலோயா பொலிஸாருடன் இணைந்து,  தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த அதேநேரம், தீ வேறு கடைகளுக்கு செல்லாமல் இருக்க டோசர் உதவியுடன் தீ பரவுவதை தடுத்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், இதுதொடர்பில்,  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .