Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Sudharshini / 2016 மே 30 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா, வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த இளம் பெண் உத்தியோகத்தரை, கடத்திச் செல்ல முயற்சித்த இளைஞர் இருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பெண்ணை கடத்துவதற்கான முயற்சி தோல்வியடையவே, இளைஞர் இருவரும் பெண்ணின் கைப்பையை பறித்துக்கொண்டு, அதே முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அப்பெண், பதுளைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார், கைப்பையில் ஐயாயிரத்து ஐம்பது ரூபாய் பணம், அடையாள அட்டை, குடை, குடிநீர் போத்தல், தொழில் தொடர்பான சில ஆவணங்கள் இருந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .