Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
வெளிநாட்டிலிருந்து மிளகு இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு மிளகு உற்பத்திக்கான விலை வீழ்சியடைந்து செல்வதாகக் குற்றஞ்சாட்டும் மாத்தளை மாவட்ட விவசாயிகள், புதிய அரசாங்கம், மிளகு இறக்குமதியை தடைசெய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மிளகுக்கான விலை வீழ்ச்சியடைந்து செல்வாதால், மாத்தளை மாவட்டத்தில் சுமார் 20ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, ரத்தொட்ட பிரதேச சபையின் தவிசாளர் குமாரசேன தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சிறு ஏற்றுமதிப் பயிர்களை அதிகமாக உற்பத்திசெய்யும் மாத்தளை மாவட்டத்தின், ரத்தோட்டை, யட்டவத்த, உக்குவெல உள்ளிட்ட பிரதேசங்களில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் காய்ந்த மிளகுக்கான விலை 1,400 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில் தற்போது 400 வரையில் குறைவடைந்துள்ளதாகவும் அதேபோல் 500 ரூபாயாகக் காணப்பட்ட பச்சை மிளகுக்கான விலை, 65 ரூபாயாக குறைவடைந்துள்ளதாகவும் சாடினார்.
இதனால் மிளகு உற்பத்தி மூலம் பெருமளவில் வருமானம் ஈட்டி வந்த இப்பகுதி விவசாயிகள் தற்போது காணிகளை கைவிட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம், இந்த விவசாயிகளை கைவிட்டிருந்தமையே இந்நிலைக்குக் காரணம் என்றும் புதிய அரசாங்கத்தில் அவர்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்
56 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
7 hours ago
19 Sep 2025