2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

எமில்டன் காட்டுக்குச் சென்றவர்கள் மாயம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா எமில்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர், திங்கட்கிழமை இரவு முதல் காணாமால் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருடன் இணைந்து அதிரடைப் படையினரும் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

லக்சபான வாழமலை தோட்ட முகாமையாளரின் புதல்வர் உட்பட ஐவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள், சிவனொளிபாத மலைக்கு சென்றுவிட்டு பின்னர், எமில்டன் காட்டுக்கு போயுள்ளதாக தெரியவருகிறது.

நேற்று இரவு முதல் இவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரும் அதிரடைப் படையினரும் மூன்று குழுக்களாக பிரிந்துச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .