Princiya Dixci / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், எஸ்.சுஜிதா
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்துக்கு அரை நாள் சம்பள வீதம் வழங்குவதாகவும், கடந்த காலங்களில் 18 கிலோவுக்குக் குறைவாகக் கொழுந்து பறித்த போது, முழு நாள் சம்பவம் வழங்கியதாகவும், கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்பு குறைந்த கிலோ கொழுந்து பறிக்கும் போது? முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனவும் நிர்வாகம் அறிவித்ததையடுத்து, லிந்துலை தங்ககலை தோட்டத்திலுள்ள 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று வெள்ளிக்கிழமை (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்னால் சுமார் 2 மணித்தியாலயங்கள் இடம்பெற்றதுடன், நேற்றையதினம் தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்தம் சம்பளம் வழங்குவதற்கான சம்பள விவரச் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சீட்டில் 18 கிலோவுக்குக் குறைவாகக் கொழுந்து பறித்த தொழிலாளர்களுக்கு அரைநாள் சம்பளம் கணக்கில் முடித்திருப்பதை அறிந்த தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக முழு சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் வழங்காத பட்சத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட போவதாகவும் தொழிலாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.


4 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Jan 2026