2021 ஜனவரி 20, புதன்கிழமை

‘கூட்டுஒப்பந்தம் முடியும் வரை ரூ.50 ஐ வழங்கவும்’

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்   

கூட்டுஒப்பந்தம் முடிவடையும் வரை, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஐம்பது ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுமாயின், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து, வட்டவளை,  ரொசல்ல பகுதியில் நடைபெற்ற இ.தொ.காவின் இளைஞரணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஐம்பது ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டு, பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்தக் கொடுப்பனவுக்கு ஒத்துழைப்பு வழங்கமாறு கோரி, இ.தொ.காவின் பொதுச்செயலாளருக்குக் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.   

“தொழிலாளர்களுக்கு ஓரிருமாதங்களுக்கு மாத்திரம் இந்தக் கொடுப்பனவை வழங்கி, மறு மாதம் அதனை வழங்காமல் விட்டுவிட்டால் என்ன செய்வது? ஆகையால்தான் நாங்கள், கூட்டுஒப்பந்த காலம் முடியும் வரை இந்தக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்று கோருகிறோம்” என்றார்.  
“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எப்போதும் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைக்காது” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .