2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

காட்டுத் தீயால் 15 ஏக்கர் பைனஸ் வனப்பகுதி நாசம்

Editorial   / 2020 பெப்ரவரி 28 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

 

நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்ஷபான தோட்டத்தின் மேற்பிரிவில், நேற்று (27) மாலை ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, சுமார் 15 ஏக்கர் பைனஸ் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மவுசாகலை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் , ரக்காடு பகுதியிலுள்ள அதிரடிப்படையினர், கடற்படையினர்,  நல்லதண்ணி பொலிஸார் ஆகியோருடன்  இணைந்து தொழிலாளர்கள்,  தீயை அணைப்பதற்கு, நேற்று  இரவு முதல் போராடி வருகின்றனர்.

தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு சிரமமாக உள்ளதாக, நல்லதண்ணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு வனப்பகுதிக்கு தீ வைப்பதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவதுடன், காட்டு விலங்குகள் குடியிருப்புகளை நோக்கிப் படையெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .