Editorial / 2019 நவம்பர் 06 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில், பெருந்தோட்டப்பகுதி முன்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டுவந்த 2,500 ரூபாய் கொடுப்பனவு குறைக்கப்பட்டு தற்போது, 250 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக, முன்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தித் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முன்பள்ளி ஆசிரியைகள் பலர், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜாவின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். நுவரெலியா பிரதேசசபையின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று (6) நடைபெற்ற சந்திப்பின்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சி காலத்தில், மத்திய மாகாணத்தை உள்ளடக்கி நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட பகுதி, நகர் புறங்களை உள்ளடக்கிய முன்பள்ளி பாடசாலைகளுக்கு, தேர்வின் மூலம் ஆசிரியர்களாக எம்மை உள்வாங்கினார்கள். அதன்போது மாதாந்தக் கொடுப்பனவாக 2,500 ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 250 ரூபாய் மட்டுமே, தமக்கு வழங்கப்பட்டு வருவதாக, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதற்குப் பதிலளித்த தவிசாளர் வேலு யோகராஜ், இவ்வாறான அசாதாரண நடவடிக்கைகளைக் கண்டிப்பதாவும் இது குறித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமானின் கவனத்துக்குக்கொண்டு வருவதுடன், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி, காரணங்களை அறிந்து தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.
50 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
4 hours ago
4 hours ago