2021 மே 06, வியாழக்கிழமை

காடழித்த சாரதி புல்டோசருடன் கைது

பாலித ஆரியவன்ச   / 2017 ஜூன் 06 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுற்றாடல் தினமான திங்கட்கிழமை, பதுளை, மீகஹகிவுல, லுணுகலதென்ன காட்டுப்பகுதியில், காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபரொருவரை, பதுளை மாவட்ட வனவள பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன், காடழிப்புக்காக பயன்படுத்திய புல்டோசரையும் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படிப் பகுதியில் மிக நீண்டகாலமாக காடழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புல்டோசரின் சாரதியே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெட்டப்பட்ட மரங்களை, கொண்டுச் செல்வதற்கு தயாராகவிருந்த நிலையிலேயே, புல்டோசர் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், வனவள பாதுகாப்பு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .