2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

கண்டியில் இந்திய குடியரசு தின வைபவம்

மொஹொமட் ஆஸிக்   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால், இந்தியாவின் 71ஆவது குடியரசு தின வைபவம், கண்டியில் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி காலை 9 மணிக்கு, இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றி வைப்பதுடன், இந்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

கண்டி வாவிக் கரையிலுள்ள தர்மதாச வீரரத்ன மாவத்தையிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகர் தினேந்திர சிங்,  இந்திய தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளதுடன், இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆசிச் செய்தியையும் வாசிக்கவுள்ளார்.

இந்நிலையில், இந்த நிகழ்வில் இந்தியப் பிரஜைகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு, கண்டி உதவி இந்தியத் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .