2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா தொற்று; பதுளை வைத்தியசாலையில் இருவர் அனுமதி

Editorial   / 2020 மார்ச் 04 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றச் சந்தேகத்தில், ஏழு வயது சிறுவன் உட்பட இருவர் பதுளை வைத்தியசாலையின் விசேட விடுதிப் பிரிவில், நேற்று (3) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பண்டாரவளை ஹீல்ஓயா அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரும் அவரது ஏழு வயது மகனுமே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இருவர் உட்பட அவரது குடும்பம், கொரியாவில் வசித்து வந்த நிலையில், கொரியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் பாதிபைக்  கருத்திற்கொண்டு, அவர்கள் 27 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளனர்.

அவ்விருவருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்படவே அவர்கள், பதுளை வைத்தியசாலையில் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

அவ்விருவருக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்வதற்கு வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .