2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

’கற்றுக்கொண்டவர்கள் எவருக்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரா.யோகேசன்

கல்வியென்பது சதையும் நகமும் போன்றது என்றும் அதைக் கற்றுக்கொண்டவர்கள் எவருக்கும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்துள்ள மஸ்கெலியா பிரதேசசபையின் தவிசாளர் டி. செண்பகவள்ளி,  பணம் இருந்தால் மாத்திரம் எம்மால் வாழ்ந்துவிட முடியும் என்பதற்கு அப்பால், கல்வியே மிக முக்கியமானது என்றும் கூறினார்.

மஸ்கெலியா அம்பாள் மண்டபத்தில், ஐ.எம்.எச்.ஒ நிறுவனத்தின் தலைவர் க.விக்ணேஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, அனைத்துலக மருத்துவ நல அமைப்பு, நடராஜா அறக்கட்டளை ஆகியவற்றினூடாக, மலையகத்தில் சுமார் 160 உயர்தர மாணவர்களுக்கான, புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

எமது சமூகத்தில் ஒரு காலக்கட்டத்தில் படிக்காதவர்கள் பட்டிகாட்டான், தோட்டகாட்டான் என்றெல்லாம் அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் இப்படியான சூழலில், நல்ல ஆசான்களை உருவாக்கிய இந்த மலையகமும், நல்ல ஆசான்களை உருவாக்கிய பெற்றோர்களும் இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள் என்றால் அதை, வார்தைகளால் கூற முடியாத என்றும் கூறினார்.

அன்றைய காலக்கட்டத்தில், பிள்ளைகளை கற்க வைக்கவேண்டும் என்ற ஒரு கொள்கை பெற்றோரிடம் இருந்தது என்றும் பிள்ளைகளும் பெற்றோர்களுக்கு பயந்து நடந்துக்கொண்டார்கள் என்றும் ஆனால், இக்காலக்கட்டத்தில் அப்படியான ஒன்றை காணமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .