Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2016 மே 20 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
புளத்ஹோபிட்டிய, களுபான தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மண்சரிவு அபாயத்தை எதிர்யோக்கியுள்ள குடும்பங்களுக்கும் 100 தனிவீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அமைச்சர்களான பழனி திகாம்பரம் , மனோகணேசன், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய பெரேரா, மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் உட்பட பல முக்கியஸ்தர்கள் களுபான தோட்டத்துக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். அத்துடன் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்துக்கும் சென்று பார்வையிட்டனர். இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் கருத்து தெவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்iயில்,
'களுபான தோட்டத்தில் மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு எனது அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இந்தத் தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களுக்கும் பாதுகாப்பான இடத்தில் 100 தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த வீடுகள் இலவசமாக அமைத்துக் கொடுக்கப்படும். இந்த வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜூன் மாதம் 5ஆம் திகதி இடம் பெறவுள்ளது.
இதேபோல மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். எமக்கு அரசியல் அதிகாரம் கிடைத்துள்ள குறுகி காலத்தில் மக்களின் தேவை அறிந்து சேவை செய்யக்கூடிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, கொடுத்த வாக்குறுதி வழங்குவதில் நாம் எப்போதும் கவனமாக செயற்படுவோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், 'களுபான தோட்டத்தில் மண்சரிவினால் உயிரிழந்த உறவுகளுக்கு எனது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நானும் அமைச்சர் திகாம்பரமும் ஒன்றாக வந்து பாதிப்புக்களை ஆராய்ந்துள்ளோம். உடனடியாக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
களுபான தோட்டப்பகுதி மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதால் இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பாதுகாப்பான இடத்தில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். நாம் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தி குறுகிய காலம் என்றகின்ற போதும் அந்தக்குறுதிய காலத்தில் நிறைய சேவைகளைச் செய்து வருகின்றோம்' என்றார்.
களுபான தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில்; 14 பேரின் சடலங்கள்; மீட்கப்பட்டன. இரண்டு சடலங்கள் மீட்க முடியாத நிலைமை ஏற்பட்டதால் இராணுவத்தினர் மீட்பு பணிகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
மண்சரிவினாலும் மண்சரிவு அபாயத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 80 க்கும் மேற்பட்டோர் பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
42 minute ago
55 minute ago