2021 மே 06, வியாழக்கிழமை

கூட்டொப்பந்த விடயத்தில் மூத்தோரின் வழியை பின்பற்றவும்

Kogilavani   / 2016 ஜூலை 29 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

'பெருந்தோட்டத் தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மூத்த தொழிற்சங்கவாதிகள் கையாண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்' என இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் பிரதித்தலைவரும், பெருந்தோட்டப் பால் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவருமான  சு.ப.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மூத்த அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகளான சௌமியமூர்த்தி தொண்டமான், எம்.எஸ்.செல்லசாமி, அப்துல் ஹசீஸ், வி.கே.வெள்ளயன், சி.வி.வேலுப்பிள்ளை, வி.பி.கணேசன், பி.வி.கந்தையா, பி.சந்திரசேகரன், கே.வேலாயுதம், ஒ.எ.ராமையா போன்றோர் கையாண்ட வழிமுறைகளை தற்போதை தொழிற்சங்கவாதிகள் பின்பற்ற வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

மலையகத் தொழிலாளர் வரலாற்றில் 1994 ஆம் ஆண்டிற்குப் பின் 22 வருடங்களில ;10 வருடங்கள் தொழிலாளர்களின் சம்பள உடன்படிக்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆனால், இம்முறைதான் 16 மாதங்களாகியும் இவ்விடயம் இழுபறி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் சானக்கியம் மற்றும் ஒற்றுமை இன்மையே காரணம். சம்பள விடயத்தில் தொழிலாளர்களின் வாழ்வாதார நிலையை விளையாட்டாகக்கொண்டு, சில தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அதிகாரப் போக்கை கடைபிடித்து வருகின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .