2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

காட்மோரில் 200 பேர் இடம்பெயர்வு

Sudharshini   / 2016 மே 28 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்ட காட்மோரில்  இன்று (28) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 41 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர்  இடம்பெயர்ந்துள்ளனர்.

இப்பிரதேசத்தில்  2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட மண்சரிவை அடுத்து மேற்படி கும்பங்களை அங்கிருந்து வெளியேறும்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பணித்திருந்தது. எனினும், அங்கிருந்து இம்மக்கள் இதுவரை வெளியேற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்த 200 பேரும் தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .