2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'கைதிகளின் கோரிக்கைகள் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல'

Niroshini   / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ நாட்டின் பாதுகாப்புக்கோ அல்லது நாட்டின் அரசியலமைப்புக்கோ முரணானது அல்ல. மேலும்,தமிழ் அரசியல் கைதிகள் தான் முதன் முதலாக பொதுமன்னிப்புக் கோரிக்கையை முன்மொழிந்தவர்களும் அல்லவே என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

மஹிந்த ராஜபக் ஷ வட, கிழக்கினை திறந்தவெளிச் சிறைச்சாலையாகவும் மக்களை திறந்த வெளிச்சிறைக் கைதிகளாகவுமே நடத்தினார். நிறைவேற்று அதிகாரத்தையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் உச்ச அளவில் பயன்படுத்தினார்.

இந்தக் கொடுமையிலிருந்து சமத்துவமாக எம்மை வாழ வைக்கும் மீட்பர் நீங்கள் என எம் மக்கள் கருதியதாலேயே உங்களுக்காக நாம் அனைவரும் ஒன்று திரண்டோம். ஆனால், இன்று என் மனதில் அந்த நம்பிக்கை நம்பிக்கையீனமாக மாறிக் கொண்டிருக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் ஆதரவாக உள்ளவர்கள் யார், எதிராகக் குரல் கொடுப்பவர்கள் யார் என்பதைக் கூட நீங்கள் அறியவில்லையா?

அனைவரும் இதற்கு ஆதரவு நல்குகின்ற நிலையில் நீங்கள் மாத்திரம் ஏன் தயங்குகின்றீர்கள். யாருக்குப் பயப்படுகின்றீர்கள். சட்டம் நீதி என்பவற்றுக்குப் பயப்படுகின்றீர்களா அல்லது மக்களால் தூக்கியெறியப்பட்ட மஹிந்த உட்பட அவரது இனவாதக் குழுவினருக்குப் பயப்படுகின்றீர்களா? எனவும் குறிப்பிடப்படுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .