2021 மே 08, சனிக்கிழமை

குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: முத்து சிவலிங்கம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, காவத்தை கொட்டகெத்தன ஓப்பாத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்; மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்ற தகவல் எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது. பெண்ணின் கொலைக்கு காரணமானவர்களை கண்டறிந்து நீதிக்கு முன் நிறுத்த வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளதாவது,

இந்நாட்டில் மர்மக் கொலைகளும் பாலியல் வல்லுறவு சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இந்த நாட்டில் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் மையங்களும் மரண தண்டனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன. பாகிஸ்தான் உட்பட ஒரு சில நாடுகளில் மரண தண்டனை மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது.

இலங்கையிலும் மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டும்' என்றார்.

கொட்டகெத்தன மேற் பிரிவு ஓப்பாத்தை தோட்டத் தொழிலாளியான 3 குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை இ.தொ.கா வன்மையாகக் கண்டிக்கிறது.

இதுவரை இப்பிரதேசத்தில் 17 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை இனிமேலும் நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

இப்பிரதேசங்களிலேயே தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் செறிந்து வாழ்கின்றனர். அதேச்சமயம் இவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாகும்'  என மேலும் கூறினார். இதேவேளை, மேற்படி பெண்ணின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உட்பட ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X