Kogilavani / 2015 நவம்பர் 16 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் இன்று (11) காலை, கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் 15 பேர் பாதிப்படைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் 5 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது கழுகு ஒன்று மரத்தில் இருந்த குளவி கூட்டை கலைத்ததனால் குளவிகள் கலைந்து, கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது தாக்கியுள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர்களில் 13 பெண்களும் 2 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
11 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago