2021 மே 06, வியாழக்கிழமை

காழி நீதிபதி நியமனம்

Kogilavani   / 2015 நவம்பர் 17 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்துக்கான புதிய காழி நீதிபதியாக கச்சி மொஹிதீன் புகார்தீன், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் கடந்த 10 ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர்,  மாத்தளை சாஹிரா தேசிய கல்லூரி, உக்குவலை அக்மீர் மத்திய கல்லூரி, கலேவெல அல் புர்கான் மகா வித்தியாலயம், வரக்காமுர அன்னூர் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபராகக் கடமைபுரிந்த சிறந்த நிர்வாகியுமாவார். இவர், மாத்தளை கூம்பியன் கொடயில் வசித்த காலஞ்சென்ற கச்சி மொஹதீன் தம்பதகளின் புதல்வராவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .