2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சஜித்தின் ஆட்சியில் ‘தோட்டத் தொழிலாளிகள் தமிழ் விவசாயிகளாக மாறுவர்’

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில், தோட்டத் தொழிலாளர்கள் என்ற பெயரை, தமிழ் விவசாயிகள் என மாற்றியமைப்போம் என்றும்  சஜித் ஜனாதிபதியாக்கும் வரை, தாங்கள் ஓயப்போவதில்லை என்றும், அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.   

தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், மலையக மக்கள் தொடர்பிலான அத்தியாயம் இருக்கிறது.

வேறு எவருடைய விஞ்ஞாபனத்தில் இந்த விசேட அத்தியாயம் கிடையாது” என்றார்.

“இது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வெற்றி. இந்த அரசாங்கத்தில், நாங்கள் முதலாவது டெஸ்ட் விளையாடி இருக்கின்றோம்.

18ஆம் திகதிக்குப்  பிறகு, இரண்டாவது டெஸ்ட் விளையாடுவோம். தோட்டத் தொழிலாளர்கள் என்ற பெயரை, தமிழ் விவசாயிகள் என மாற்றியமைப்போம். நாற்கூலிகள் அல்ல சொந்தக் காணியில் சொந்த வீடுகளைக் கொண்ட தமிழ் விவசாயிகள் என்ற அடையாளத்தை, எமது ஜனாதிபதி சஜித் நிறைவேற்றுவார்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .