2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சஜித்தின் தோல்வியால் மாரடைப்பால் ஒருவர் மரணம்

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்ததை  ஏற்றுக்கொள்ள முடியாத அவரது ஆதரவாளர் ஒருவர், மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மிகத் தீவிரமான ஆதரவாளரான அக்பர் பாதுஸா என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மேற்படி நபர், ஜனாதிபதித் தேர்தல் முடிவு, ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் பதவியிலிருந்து சஜித் விலகியமை என்பவற்றால் மிகவும் மனவருத்தத்துடன் இருந்தார் என்றும் இந்நிலையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை பிரதேச சபையின் உறுப்பினர் நுவன் ரணசிங்க தெரிவித்தள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .