2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

’செந்திலுக்கு எதிராக பதிவிட்டோருக்கு நடவடிக்கை’

எம். செல்வராஜா   / 2019 நவம்பர் 24 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கூறிய விடயங்களை, முழுமையாக திரிவுபடுத்தப்பட்ட நிலையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஊடாக பகிர்வதற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, பசறை ​பிரதேசசபை உறுப்பினர் வேலு ரவி தெரிவித்தார்.

பசறையில், இன்று (24), நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஜீரணிக்க முடியாமல், அதைத் திசை திருப்பும் வகையில், சில அரசியல்வாதிகள், ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்மானுக்கு எதிராக, அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் கூறிய கருத்துகள், திரிவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதை, ஊவா மக்கள் நம்பப் போவதில்லை என்றும், ஊவா கல்வியயலாளர்கள், புத்திஜீவிகள் ஆகியோர், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

ஊவாவின் தமிழ்க்கல்வித்துறையில், மாகாண முதலமைச்சரும் தலையீடு செய்யாத வகையில், தனித்துவமாக தமிழ்க்கல்வித்துறை இயங்க வழிவகுக்கப்பட்டுள்ளது என்றும்  பெரும்பான்மையின பாடசாலைகளுக்கு நிகரான வகையில், தமிழ்ப்பாடசாலைகள் மாற்றம் பெற்றுள்ளன என்றும் இதற்கு, செந்தில் தொண்டமானே காரணம் என்றும்  அவர் கூறினார்.

இந்நிலையில், இவருக்கு எதிராக முன்வைக்கப்படும் போலிப் பிரசாரங்கள் குறித்து,  விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .