2021 மே 10, திங்கட்கிழமை

'சபரிமலை யாத்திரிகள் எச்சரிக்கையுடன் செயற்படவும்'

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா      

மலையக பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரைகளை மையப்படுத்தி மோசடி பேர்வழிகள் தம் கைவரிசைகளை காட்டி வருவதையிட்டு, இதுதொடர்பில் யாத்திரிகள் மிகுந்த எச்சரிக்கையாக செயற்படுமாறு ஊவா மாகாண பெருந்தோட்ட அமைச்சின் இணைப்பாளர் ப.சந்திரமோகன் வேண்டுகோள் விடுத்ததுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடமும் பதுளை பகுதியிலிருந்து சபரிமலை சென்ற யாத்திரிகர்கள் மோசடி பேர்வழிகளிடம் அகப்பட்டு பெரும்பாதிப்புள்ளாகியிருந்தனர்.

அதுபோன்று இம்முறையும் மோசடி பேர்வழிகள் பெருகியுள்ளனர். சபரி மலை செல்லும் யாதிரியர்கள் மோசடி பேர்வழிகளிடம் சிக்கிவிடாமல் மிகுந்த எச்சரிக்கைகளுடன் செயற்படும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதுதொடர்பாக உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் 071-3401049 எனும் கையடக்கத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X