2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

சுற்றுலா பயணிகளின் விவரங்களைத் திரட்ட நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

ஹட்டன் நகரிலுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு வருகைத் தருவோரின் விவரக்கோவையை,  நாளாந்தம் நகரசபைக்கு வழங்குமாறு, ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தலைவர் ஆர்.பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுத் தொடர்பில், நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளின் விவரம் திரட்டப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

ஹட்டன் - டிக்கோயா நகரசபை சபையும் ஹட்டன் பொலிஸாரும் இணைந்து, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துவருவதாக அவர் தெரிவித்தார். 

சுற்றுலா பயணிகளின் தகவல்களைத் திரட்டுவதற்காக  நகரசபையால்  தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சுற்றுலா விடுதிகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .