2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சிவனடிபா​தமலை வனப்பகுதிக்கு தீ வைப்பு

செ.தி.பெருமாள்   / 2020 மார்ச் 03 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மவுசாகலை நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் பிரதான நீர் வீழ்ச்சிகளான காட்மோர், மறே ஆகிய நீர்வீழ்ச்சிகளுக்கு இடையில் உள்ள சிவனடிபாதமலை வனப்பகுதிக்கு, இன்று (03) அதிகாலை, இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது என, நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், 10 ஏக்கர் வனப்பகுதி தீயால் எரிந்து நாசமாகியுள்ளது என்றும் வனப்பகுதிகளிலுள்ள உள்ள வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு இந்தத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், நீர் ஊற்றுகள் வற்றும் அபாயம் காணப்படுவதாகவும் எனவே, இவ்வாறு தீ வைப்போரைக் கண்காணிக்க, விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X