2021 மார்ச் 04, வியாழக்கிழமை

சு.க ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இரம்புக்கனை, கெபேல்ல பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளரது வீட்டின் மீது நேற்று அதிகாலை (27), இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 12 மணியளவில், வீட்டில் எல்லோரும் உறங்கி கொண்டிருந்த போது, வீட்டின் ஜன்னல் மற்றும் கூரையின் மீது கற்கல் வீசப்பட்டதாகவும் இதனை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர்கள் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அறிந்த சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் ஆகியோர் ஆதரவளரின் வீட்டை, நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .