2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி 35 வயது குடும்பஸ்தர் கைது

Kogilavani   / 2016 மார்ச் 27 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

பொகவந்தலாவை, கீவ் பிரிவு தோட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த  முயன்றதாக கூறப்படும் 35 வயது குடும்பஸ்தரை  பொகவந்தலாவை பொலிஸார் சனிக்கிழமை(26) கைதுசெய்துள்ளனர்.

குறித்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அயல்வீட்டை சேர்ந்த மேற்படி நபர் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொற்றோர்களினால்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து,   சந்தேக நபரை பொகவந்தலாவ பொலிஸார் சனிக்கிழமை(26) மாலை கைது செய்தனர்.  

சிறுமி  வைத்திய பாரிசோதனைக்காக பொகவந்தலாவை வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X