2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

’ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கைப்படி மலையக மக்களுக்கே முன்னுரிமை’

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பா.நி​ரோஸ்

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில், எதிர்காலத்திட்டமிடலே அதிகமாகப் பேசப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், அதுவே அவருடைய பொருளாதார திட்டமிடலெனில், தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் இருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கே பொருளாதார சமவாய்ப்பைப் பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றி கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம், நேற்று (08) நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு பிரஜைக்குமாக ஏற்றுக்கொள்ளத்தக்க மட்டத்திலானப் பொருளாதார நிலைப்பாட்டை உறுதிப்படுத்தல், முன்னேற்றுவதற்கு முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் சமவாய்ப்புக்களை வழங்குதல் போன்றவற்றை ஜனாதிபதி கொள்கையாகக் குறிப்பிட்டிருந்தார் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்படாத நிலையில், புதிய ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை, அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்வது போலவே உள்ளது என்றும் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றிபெற்றால், பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறப்பட்ட போதிலும், அது தொடர்பில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும்  ​அமைச்சர்களானவர்கள், ஏற்கெனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--