2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

ஜனாதிபதி கோட்டா தலதாமாளிகைக்கு நாளை விஜயம்

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்‌ஷ, கண்டி ஸ்ரீ தலதமாளிகைக்கு, நாளை (20) காலை விஜயம் செய்து, மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

இதன்போது அவர், மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரரையும் கண்டி அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கத் தேரரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

தொடர்ந்து அவர், ராமக்ஞ நிக்காயவின் மஹாநாயக்க தேரரையும் கெட்டம்பே ராஜோபவனாராம விஹாரையின் விஹாராதிபதியையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .