Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 மே 26 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மழையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, பல வீதிகள் மண்சரிவு அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
நோட்டன் -கொழும்பு, ஹட்டன் கொழும்பு, ஹட்டன் நுவரெலியா ஆகிய பிரதான வீதிகளின் பல இடங்களில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளன. ஒரு சில இடங்களில் மண்திட்டு சரிவின் காரணமாக, ஒருவழி போக்குவரத்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதனால், வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிகாலை 4 மணியளவில் ஹட்டன் ஸ்டிரதன் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரு வீடு பகுதியளவு சேதமாகியுள்ளது. எனினும், குடியிருப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் அயலவர்களின் வீட்டில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பதுளை கொழும்பு புகையிரத பாதை, ஹட்டன் மல்லியப்பு பகுதியில், சிறியளவிலான மண்சரிவு ஏற்பட்டதனால் நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா வரை செல்லவிருந்த புகையிரதம் சற்று தாமதமாகியே இன்றுக் காலைச் சென்றுள்ளது.
நீரேந்து பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் லக்ஷபான, நவலக்ஸபான, காசல்ரி, மவுசாலை,கெனியோன், விமலசுரேந்திர மேல் கொத்மலை, ஆகிய பிரதான நீர்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது. இதனால், கரையோரங்களில் இருப்பவர்களை பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மழை காரணமாக மலையக பாடசாலைகளின் மாணவர்களின வரவும் இன்றைய தினம் மிக குறைவாகவே காணப்பட்டன
பல இடங்களில் வெள்ள நீர், விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளதால் விவசாயக் காணிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 Apr 2021
17 Apr 2021