2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

தேயிலை மலையில் பாம்புகள் ஊடாட்டம்

ஆ.ரமேஸ்   / 2020 ஜனவரி 05 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா, கந்தப்பளை பார்க் தோட்டத் தேயிலை மலைகளில், பாம்புகளின் ஊடாட்டம் அதிகரித்துள்ளது என்றும் இதனால், தேயிலை மலைக்குத் தொழிலுக்குச் செல்லும் தாங்கள் அனைவரும், அச்சத்துடனேயே பணியாற்றி வருவதாகவும்,  தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடபுஸ்ஸலாவ பெருந்​தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் இந்தத் தோட்டத்தின் தேயிலை மலைகள், பராமரிப்பின்றிக் காணப்படுவதே, இதற்குக் காரணம் என்றும் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வீடுகளுக்கு அருகிலுள்ள குப்பைகளை அவை நாடி வருவதாகவும் தோட்ட மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.    

மேற்படி தோட்டத்தின் 4ஆம் இலக்கத் தேயிலை மலையில், வெள்ளிக்கிழமை (3) மலைப்பாம்பொன்று,  பிடிக்கப்பட்டதாகவும் இனி வெயில் காலம் என்பதால், பாம்புகளின் ஊடாட்டம் அதிகரித்திருக்கும் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே தோட்ட நிர்வாகம், தேயிலை மலைகளைச் சுத்தப்படுத்தி, தங்களது தொழிலைச் சரிவரச் செய்வதற்கு உதவ வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .