2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

துரைசாமி விஜிந்த்துக்கு மலேசியா செல்ல இ.தொ.கா உதவி

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆர்.ரமேஷ், நீலமேகம் பிரசாந்த்

டிசெம்பர் மாதம் 21ஆம் திகதியன்று, ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள பூண்டுலோயா பழைய தோட்டத்தைச் சேர்ந்த துரைசாமி விஜிந்த் என்பவருக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானால் உருவாக்கப்பட்டுள்ள மலையகச் சிறகுகள் அமைப்பின் மூலம், உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், துரைசாமி விஜிந்த், மலேசியா செல்வதற்காக 350,000 ரூபாய் நிதி உதவி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் வழங்கப்பட்டது.

மலேசியாவில் நடைபெறவுள்ள 21ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், சுத்தி எறிதல், 5,000 மீற்றர் நடைப்பயணம் போன்ற மெய்வல்லுநர் போட்டிகளுக்காக, இவர் மலேசியாவுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .