2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தரிசு நிலங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை

Kogilavani   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்   

பெருந்தோட்டப் பகுதியில் காணப்படும் தரிசு நிலங்கள், மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சினால் பெறப்பட்டு, 25ஆயிரம் பேருக்கு, வீட்டுத் தோட்ட பயிர் செய்கைக்காக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் மருதுபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.  

தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை பண்ணையாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.   

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “இன்று இலங்கையில், பால் உற்பத்தியில் நுவரெலியா மாவட்டம் முதலிடத்தைப் பெற்று வருகின்றது. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தேயிலை தொழிலை மாட்டுமே நம்பி வாழ்கின்றார்கள். இவர்கள் தமது வாழ்க்கைச் செலவைக் கருத்திற் கொண்டு, சுயத்தொழிலிலும் ஈடுபட வேண்டும்.  

தற்போது நாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கமைவாக, தேசிய உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

இந்தத் திட்டத்தில், மாகாண விவசாயத்துறை அமைச்சின் ஊடாக நுவரெலியா, கண்டி,மாத்தளை பகுதியில் காணப்படும் பெருந்தோட்டங்களை உள்ளடக்கி, பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் செய்யவிருக்கின்றோம். அதேவேளையில், விவசாயம் மற்றும் பண்ணை வளர்ப்பை ஊக்குவிக்கவும் நாம் தயாராக உள்ளோம்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--