Kogilavani / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம் வழங்கப்படாததன் காரணமாக, கந்தப்பலை டிவிசனுக்கு உட்பட்ட 3 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த சனிக்கிழமை (10) முதல், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், தோட்ட அதிகாரி துப்பாக்கியை வைத்துஅச்சுறுத்தி வருவதாகவும் எனவே, குறித்த தோட்ட அதிகாரியை இடமாற்ற வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாக் தோட்டம், சந்திரகாந்தி தோட்டம், தேயிலைமலை தோட்டம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த, சுமார் 1,500 தொழிலாளர்களே, இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வெயில் காலம் என்பதால், தேயிலை வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் ஆனால், தோட்ட நிர்வாகம் 18 கிலோவுக்கு மேல் கொழுந்து பறித்தால் மட்டுமே, 730 ரூபாய் அடிப்படையில் சம்பளத்தை வழங்க முடியும் என்று கூறி வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம், தேயிலை இறாத்தல் குறைவாக எடுத்தவர்களுக்கு, அரை பேர் சம்பளமே வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் தமக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கும் வரை, நவம்பர் மாத சம்பளத்தை வாங்கப்போவதில்லை என்று கூறியுள்ள தொழிலாளர்கள், பணிப் பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago