2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தேடி தேடி அலைந்த 3 சிறுவர்கள் மீட்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின்றி, கொழும்பிலிருந்து ஹட்டனுக்கு வந்த மூன்று சிறுவர்களை, தமது பாதுக்காப்பில் வைத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை செல்வகந்த தோட்டத்தைச் சேர்ந்த சிவபிரகாசம் பிரவீன் (வயது 13), அஸ்வினி (வயது 10), சரணி (வயது 8)  ஆகியோரே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி மூவரும் தன்னந்தனியாக கொழும்பு, கடவத்தையிலிருந்து,  ஹட்டனுக்கு பஸ்ஸில் பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று (25) காலை 11.30 மணியளவில் வந்து இறங்கிய இவர்கள், மாலை 3.30 வரை, பஸ் தரிப்பிடத்திலே நின்றுகொண்டிருந்துள்ளனர்.  இவர்களை அவதானித்த, சிவில் பாதுகாப்பு பொலிஸார், அவர்களை ஹட்டன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தமக்கு பெற்றோர் இருப்பதாகவும், தந்தை  கடவத்தையில் வைத்து பஸ்ஸில் ஏற்றிவிட்டதாகவும் மேற்படி சிறுவர்கள் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களின் பெற்றோர் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்காண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .