2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

த.மு.கூவின் இணை பேச்சாளர்கள் நியமனம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை பேச்சாளர்களாக,  நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலுகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்ட எம்.பி அரவிந்தகுமார், கூட்டணியின் நாடாளுமன்ற குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்முடிவுகளை கொழும்பில் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் மத்தியக்குழு எடுத்துள்ளது.

கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன், செயலாளர் அன்டன் லோரன்ஸ், தவிசாளர் புத்திர சிகாமணி, உப செயலாளர் சண் பிரபாகரன், சரத் அத்துகோரள ஆகியோர் கலந்துக்கொண்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .