Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 28 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பலாங்கொடை தனமல்வில வீதி, ஹம்பேகமுவ வனப் பிரதேசத்தில், கஞ்சா செய்கை மேற்கொண்டு வந்தார் என்றக் குற்றச்சாட்டில் நபரொருவரை, நேற்று முன்தினம் கைதுசெய்த பொலிஸார், 2,000 கஞ்சா செடிகளையும் அழித்துள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, சூரியவெவ விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள், லுணுகம் வெஹெர வனப் பரிபாலன காரியாலய அதிகாரிகள், உடவளவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் கூட்டு முயற்சியுடன் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்ப பட்டது.
மேற்படி கஞ்சா தோட்டம் சோதனை நடவடிக்கையின் போது கை துசெ ய்யப்பட்ட 37 வயதான இண்டு பிள்ளைகளின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சுமார் 4 முதல் 5 அடி உயரமான 2,000 கஞ்சா செடிகள் நடப்பட்டிருந்ததாகவும் இவை அனைத்தும் பிடுங்கப்பட்டு அவ்விடத் திலேயே அழிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
03 Jul 2025
03 Jul 2025
03 Jul 2025