2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

நீர்மின் உற்பத்தி நிலையங்களைப் பார்வையிட அனுமதி மறுப்பு

Editorial   / 2020 மார்ச் 15 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

கொரோனா ​வைரஸ் தொற்று காரணமாக, நீர்மின் உற்பத்தி நிலையங்களைப் பார்வையிட  அனுமதி வழங்கப்படாதென லக்ஸபான நீர்மின் உற்பத்தி நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர் சி.ஜி.எஸ்.குணசேகர தெரிவித்தார்.

பாடசாலை விடுமுறையால் நீர்மின் உற்பத்தி நிலையங்களைப் பார்வையிட அதிகமானோர் அனுமதி கோருவதாகவும் எனினும் 2 வாரகாலத்துக்கு இதனைப் பார்வையிட அனுமதி வழங்கப்படமாட்டாதென்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மின்சார சபையால் நடத்தப்பட்டு வந்த பாடத்திட்டமும் பயிற்சிகளும் தங்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நீர்மின் உற்பத்தி நிலையத்தை அண்மித்த இடங்களில் தொழில்புரியும் பொறியியலாளர்கள், பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை மேமம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஜி.எஸ்.குணசேகர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X